தாமதமும் ஏனோ? நீ
மாமதக்காரியோ?
(எந்தன்)
பூமனம் வாடுதே (இந்தப்)
பாமரன் தனைக் கண்காண
(தாமதமும்)
நங்கையின் திருமேனி
பழுத்திட்டநல் கோவைக்கனி
கங்கையைப்போல் என்னைத்
தூய்மையாக்கும் நதியும் நீ
மங்கள நாயகி நீ
மந்திர மோகினி நீ (பல)
திங்களாய்த் தேடுகிறேன் - என்
திங்களே (என்மனவானில்) நீ தோன்ற (தாமதமும்)
- Sai