என்தாரமும் நீ! - என்னுயிரின்
ஓம்காரமும் நீ!
ஸ்ருங்கார ரசம் பொழியும் - இனிய
ரீங்காரமும் நீ!
வந்தாய் என் வாழ்வினில்
வசந்த தென்றல் வருடியதுபோல்!
செந்தாழம்பூ மேனியாள்
சிரிப்பினில் சிறைவைத்து!
கண்ஜாடையால் ஏதோ சொல்கிறாள்
கருத்துரைக்க தமிழில்லையோ?
விழிகள் காதல் சொல்லும் நேரம்
மொழிகள் இங்கு தேவையோ? (வாழ்வின்)
வழிகள் முழுதும் நீ வந்தால்
குழிகள்கூட நேராகும்! - வாழ்வும்
பழிகள் தீர்ந்து சீராகும்!
- Sai

