
விண்ணோடு வெண்ணிலா வரும் நேரத்திலே
உன்னோடு நான் கூடும் நேரத்திலே
கண்ணோடு காதல் சொல்லும் நேரத்திலே - நீ
என்னோடு சண்டையிடலாமா?
ஏமாற்றம் ஏனடி கண்ணே?
உனைமாற்றத்தானே நான் வந்தேன்
நடமாடும் நவநாகரீகம் அதை
தடைபோட்டு உடைப்போமே நாமும்
நான் பாடும் பாடல் நீ கேளாயோ?
நான் வாடும் நிலையும் நீ அறியாயோ?
ஊனாட உள்ளே நீ உயிராக வந்தாய்
ஏன் நாடகம் இனி ஏன் தாமதம்?
தேடலால் கிடைக்காத அரிய இன்பமே
பாடலால் சொல்லமுடியா புதிய எண்ணமே
ஊடலால் ஒன்றிணையும் நமது உள்ளமே
ஆதலால் வரைந்திடுவோம் காதல் வண்ணமே!
- Sai
No comments:
Post a Comment