Sunday, April 5, 2020

மகாராஜன் பணிகிறேன்

Image result for king begging

மகாராஜன் பணிகிறேன் - உன் இதழில்
மந்திரப் பிறை சந்திரன் தோன்ற

சகாவாக சாகசமா?
சந்தோசம் பெருக சம்மதம் தருக!

பூமாலை சூடிடும் புவிகாணா பேரழகி
மாமாவென்று அழைத்திடவும் தயக்கமோ? - பல
மாமாங்கமாகமாயினும் கனியாத உளமோ?
ஏமாற்றம் தாங்காத இதயமோ எனதே
தாமாக முன்வந்து கேட்கிறேன் தயைசெய் - இக்
கோமானின் கடுந்துயர் நின்றிட வழிசெய்!
 - Sai

என்மனம் அலைபாயுதே!

Kiss man and woman - Abstract paintings Alessandro Tognin

என்மனம் அலைபாயுதின்று
கண்மணி காதலாசை தந்ததும் - என் மனம்

மன்மத ராகம் பாடியதும்
கண்கள் மலர்ந்திட உடலும் சிலிர்த்திட
பஞ்சணையில் புது கலைதனை கற்றிட  - என் மனம்

பன்னெடுங்காலமாய் நிதமொரு யுகமாய்
நித்திரை கொள்ளாது நினைந்தேன் உனை! 
வண்ணமலர் சூடிடும் எழில்முகம்
கண்டிட கொண்டிட கனியிதழ் சுவைத்திட
கன்னக்குழியில் ஒரு முத்தமும் தந்திட - என் மனம்

 - Sai

Saturday, January 25, 2020

அவள் உருகக்கண்டு!


Image result for couple abstract painting


வண்ணமகள் இதழ்ச்சிரிப்பில்
    மன்னனவன் மையலுற்று
உண்ணும் உணவு மறுத்தான்
    உறங்குதல் அறவே மறந்தான்

திண்ணமுற்றான் தேடினான்
    திருமகள்கரம் பற்ற
கண்ணிலடங்கா கற்சிலையழகைக் 
    கண்டான் இன்று கவியுமானான்

எண்ணமெல்லாம் அவளைச்சுற்றி
    இன்னிசையாய் மாறியதோ!
மண்ணும் விண்ணும்கூட அவள்
    கண்ணசைவில் கரைந்ததோ!

வெண்ணிலா முகம்கண்டு
    வீசுதென்றல் வருடக்கண்டு
பண்ணறியா பாமரனவன்
    பாடினான் அவள் உருகக்கண்டு! 

                   - Sai

Wednesday, October 9, 2019

என்தாரமும் நீ!!!

Related image

என்தாரமும் நீ! - என்னுயிரின்
ஓம்காரமும் நீ!
ஸ்ருங்கார ரசம் பொழியும்  - இனிய
ரீங்காரமும் நீ!

வந்தாய் என் வாழ்வினில்
வசந்த தென்றல் வருடியதுபோல்!
செந்தாழம்பூ மேனியாள்
சிரிப்பினில் சிறைவைத்து!
கண்ஜாடையால் ஏதோ சொல்கிறாள்
கருத்துரைக்க தமிழில்லையோ?

விழிகள் காதல் சொல்லும் நேரம்
மொழிகள் இங்கு தேவையோ? (வாழ்வின்)
வழிகள் முழுதும் நீ வந்தால்
குழிகள்கூட  நேராகும்! - வாழ்வும் 
பழிகள் தீர்ந்து சீராகும்!
- Sai

கனா காண்கிறேன்!

Related image

கனா காண்கிறேன்
கண்கள் திறந்தபடி! - காதல்
சொல்ல விழைகிறேன்
வார்த்தை தடுக்குதடி!
நெஞ்சம் பதைக்கும்
இந்த நிலையும்
என்று மாறுமோ? - என்
எண்ணக் கூட்டில்
வண்ணம் பூசிட
அடைத்த காதல்
வெளியில் பறந்திட - முதல்
முத்தம் தருவாயோ? நீயடி!

மந்தகாசம் சிந்தும் உன்முகம்
எந்தன் இதயத் துடிப்பின் உதிரம்
கூந்தல் அழகோ நதியின் வடிவம்
வாஞ்சையாய் என் விரல்கள் நெருடும்
காந்தக் கண்கள் காதல் காட்டிடும்
சாந்தக் குரலோ தேனை ஊட்டிடும்
விந்தை மயக்குதடி என்
சிந்தை கிரங்குதடி!

இரு தந்தி கொண்ட வாழ்க்கை வீணையில்
காதல் வந்து மீட்டும் தருணம்
ஒற்றை உயிராய் தாமும் மாறி
இன்ப இசையை உலகில் பொழியும்
அழகைக் காண்போமா? சொல்லடி!
- Sai

காணாமல் போவதுமேனோ?


 Image result for melancholy art
























காணாமல் போவதுமேனோ?
கண்ணே இனி தாமதமேனோ?

இவ்வுலகினை மறந்து நிற்கும்
இந்நிலையினை என்ன சொல்வேன்?
அவ்வுலகினில் ஆவி சென்று
அந்நிலவினில் உன்நிழலைக் கண்டு வியக்கிறேன்!
அந்நிழலினை  நிஜமாக்கத் தவிக்கிறேன்!

என்னுயிரினில் கலந்துவிட்ட
உன்னுருவம் போலொரு பிம்பம்
என்னருந்துயர் நீங்கப் பிறந்த
நல்மலரிடை மலர்ந்த பெண்ணே!

                                      (என்னைக்)
காணாமல் போவதுமேனோ?
கண்ணே இனி தாமதமேனோ?
வீணாக வம்புகள் பேசி
இந்நாளும் போவதுமேனோ?

கண்ணுக்குள்ளே காதல் காட்டுகிறேன்
அதைக் கண்டும் காணாமல் போவதுமேன்? (இந்தப்)
பெண்ணுக்குள்ளே காதல் தோன்றாதோ? இல்லை
மண்ணுக்குள்ளே புதைந்து போனதோ?

                                     (என்னைக்)
காணாமல் போவதுமேனோ?
கண்ணே இனி தாமதமேனோ?
வீணாக வம்புகள் பேசி
இந்நாளும் போவதுமேனோ?
- Sai

Friday, September 6, 2019

தாமதமும் ஏனோ?

Image result for longing

தாமதமும் ஏனோ? நீ
மாமதக்காரியோ?

                                   (எந்தன்)
பூமனம் வாடுதே (இந்தப்)
பாமரன் தனைக் கண்காண
                                                         (தாமதமும்)


நங்கையின் திருமேனி
                      பழுத்திட்டநல் கோவைக்கனி
கங்கையைப்போல் என்னைத்
                      தூய்மையாக்கும் நதியும் நீ
மங்கள நாயகி நீ
                       மந்திர மோகினி நீ (பல)
திங்களாய்த் தேடுகிறேன் - என்
                      திங்களே (என்மனவானில்) நீ தோன்ற                                                                              (தாமதமும்)
- Sai